தாயின் அரவணைப்பில் தூங்கும் குட்டி யானையின் படத்தினை ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மகிந்திரா ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்து தமிழக வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு,
'கண்டிப்பாக எடுக்கிறோம். ஆனால், ஆவணப்படத்தைப் பார்க்க நீங்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு வருவேன் என்று உறுதியளிக்க வேண்டும்“ என கோரியுள்ளார். கோவையில் வழிதவறிய குட்டி யானை, மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் மீண்டும் தாயிடம் சேர்க்கப்பட்டது. அன்பு பொழியும் தாயின் அரவணைப்பில் குட்டி யானை துயில் கொள்ளும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.