பாலஸ்தீனத்தை ஆதரிப்பது எனக்கு இழப்பு - மியா கலீஃபா கருத்து!

69487பார்த்தது
பாலஸ்தீனத்தை ஆதரிப்பது எனக்கு இழப்பு -  மியா கலீஃபா கருத்து!
பாலஸ்தீனம் - இஸ்ரேல் போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு என்று அறிவித்த முன்னாள் ஆபாசப் பட நடிகை மியா கலீஃபா மீது பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலையை புரிந்து கொண்டால் அவர்களுக்கு பக்கபலமாக நிற்பதை தவிர்க்க முடியாது. அது முடியாவிட்டால், நீங்கள் இனவாதத்தின் தவறான பக்கத்தில் இருக்கிறீர்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வரலாறு அதை காலப்போக்கில் நிரூபிக்கும். பாலஸ்தீனத்தை ஆதரிப்பதால் எனக்கு தொழில் வாய்ப்புகள் பறிபோகும், ஆனால் நான் சியோனிஸ்டுகளுடன் வியாபாரம் செய்ததற்காக என் மீதே நான் கோபம் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிறப்பால் லெபானைச் சேர்ந்த மியா கலீஃபா பின்னர் அமெரிக்காவில் குடியேறினார்.

தொடர்புடைய செய்தி