ஈரோடு: கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் குவிந்துவருகின்றனர். கடந்த வாரம் டெல்லிக்கு ரகசிய பயணம் மேற்கொண்ட செங்கோட்டையன், இன்று மீண்டும் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதிக வாக்குகள் கிடைக்கும் என பாஜக போட்ட கண்டிசனுக்கு இபிஎஸ் மறுப்பு தெரிவித்த நிலையில், செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளராக மாற்ற பாஜக காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.