இந்தியாவில் பொதுவாக ஓய்வுக்குப் பிறகு, தங்களுடைய சேமிப்பு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான வருமானத்தைக் கொடுக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். இவர்களுக்கான சிறந்த திட்டமாக, அஞ்சலகத்தில் ‘மூத்த குடிமக்கள் சேமிப்பு’ திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 வரை சம்பாதிக்கலாம். இதில், ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதுகுறித்த மேலும் விவரங்களை, அஞ்சலகங்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.