சத்தீஸ்கர் மாநிலத்தில் சன்னி லியோன் பெயரில் ஆன்லைன் கணக்கு தொடங்கி, அரசின் திட்டங்களைப் பெற்று மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில பாஜக அரசு சார்பில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அந்த தொகையை பெறுவதற்கான அரசின் விண்ணப்பத்தில் சன்னி லியோன் - ஜானி சின்ஸ் தம்பதி என போலியாக பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் மாதாமாதம் ரூ.1,000 பெற்றுவந்தது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.