விண்வெளியில் இருந்து 286 நாட்களுக்கு பிறகு பூமிக்கு புன்னகை முகத்துடன் இன்று (மார்ச் 19) அதிகாலை திரும்பியுள்ளார் சுனிதா வில்லியம்ஸ். தொடர்ந்து 17 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று அதிகாலை 2.41 மணிக்கு டிராகன் விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. அதன்பின்னர் அதன் வேகம் குறைந்து பாராசூட் துணையுடன் புளோரிடா கடலில் சரியாக அதிகாலை 3.27 மணிக்கு பத்திரமாக இறங்கியது.