கோடையில் உழவு செய்வதன் மூலம் மண்வளமும், மகசூலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் வெளியிட்டசெய்திக் குறிப்பில், "கோடை காலத்தில் உழவு செய்யும்போது வெப்பமும், குளுமையும் மண்ணுக்குக் கிடைக்கும். மண்ணைப் புரட்டி விடும்போது முதலில் மண் வெப்பமாகி பிறகு குளுமை அடையும். பெய்யும் மழை நீரானது நன்கு நிலத்தில் ஊடுருவி நிலத்தின் அடிப்பகுதிக்குச் சென்று தங்கும். ஈரப்பதம் காக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.