கோடை வெயில் உக்கிரத்தால் கோழிகள் இறப்பு அதிகரித்துள்ளது. தினமும் 40 முதல் 50 கோழிகள் வரை உயிரிழப்பதாக, கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும், 40,000 கறிக்கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் தினமும், 70 லட்சத்திலிருந்து, 1 கோடி கோழிகள் வரை விற்கப்படுகின்றன. 'பிராய்லர்' கோழிகள் 42 நாட்கள் வரை பண்ணைகளில் வளர்க்கப்பட்டு பின்னர் இறைச்சி கடைகளுக்கு விற்கப்படும்.