உ.பி: சீதாபூரில் பிந்து சிங் (40) என்பவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் பதிவு செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் தனது உறவினர்களான பங்கஜ், அனில் மற்றும் அவரது சகோதரியின் கணவர் ராம் ஷரன் ஆகியோர் பணத்தகராறில் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார். அதன்பின், "டாடா, பை பை, நமஸ்தே.. விடைபெறுகிறேன்" என்று கூறிவிட்டு விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.