சாட்டை துரைமுருகன் நடத்தும் ‘சாட்டை’ யூடியூப் சேனலுக்கும், நாதகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது முகப்பு படத்தில் நாதக கொள்கை பரப்பு செயலாளர் என்று குறிப்பிட்டிருந்ததை நீக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, சாட்டை துரைமுருகன் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா? அல்லது அவரை கட்சித் தலைவர் சீமான் நீக்கிவிட்டாரா? என்ற கேள்வியெழுந்துள்ளது.