மலைப்பகுதிகளில் பயணம் செய்வது சில சமயங்களில் ஆபத்தானதாக முடியலாம். கனமழை செய்தால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில், சமீபத்தில் நேபாளத்தில் நிலச்சரிவிலிருந்து பொதுமக்கள் உயிர் தப்பினர். காட் ரோட்டில் பயணிகள் சென்று கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த மக்கள் அனைவரும் பயந்து ஓடினர். இதனால் அவர்கள் உயிர் தப்பியது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.