திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. கார் ஓட்டும்போதே பிரிந்த உயிர்

67பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாப்பூர் அருகே நேற்று (மார்ச் 15) நள்ளிரவில் தீரஜ் என்பவருக்கு கார் ஓட்டும்போதே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், அதிவேகமாக சென்று சாலையில் இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், தீரஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி