பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது 200 சிறைக்கைதிகள் தப்பி ஓடியுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில், 16 முறை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டங்கள் குலுங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியை அடுத்துள்ள மாலிர் மாவட்ட சிறைச்சாலையில் இருந்த 600 கைதிகள் சிறை அறைக்குள் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர். இதனை பயன்படுத்திக்கொண்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர்.