ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக காவல்துறை பாதுகாப்பு அனுமதி வழங்காததால், ஏப்ரல் 6ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஐபிஎல் ஹோம் மேட்ச் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளது. ராம நவமி அன்று மேற்குவங்கம் முழுவதும் 20,000 ஊர்வலங்கள் நடைபெறும் என்று பாஜக தலைவர் சுவேந்து முன்னதாக அறிவித்திருந்தார். இதனால் புதிய தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. கடந்த சீசனிலும் பாதுகாப்புக் காரணங்களால் ஐபிஎல் போட்டி மாற்றியமைக்கப்பட்டது.