RCB அணியின் IPL வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கடந்த 4-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா, "பெங்களூருவில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வு RCB அணியின் தனிப்பட்ட நிகழ்வு, இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருப்பதை பிசிசிஐ உறுதி செய்யும்" என தெரிவித்துள்ளார்.