பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் உதவியுடன் சில நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு நனவாகியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.18 கோடி வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 85,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவி வழங்கப்படும்.