நாட்டில் மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. எலெக்ட்ரிக் மொபிலிட்டி புரமோஷன் ஸ்கீம் (EMPS) நீட்டிப்பை அறிவித்துள்ளது. EMPS மூலம் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும். பைக்/ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.25,000-50,000. இந்தத் திட்டம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.