'சுப்ரமணியபுரம்' பட நடிகர் மாரடைப்பால் மரணம்

68பார்த்தது
'சுப்ரமணியபுரம்' பட நடிகர் மாரடைப்பால் மரணம்
தமிழ் சினிமா குணச்சித்திர நடிகரான முருகன் (78) மாரடைப்பு காரணமாக இன்று (ஜூன் 4) காலமானார். சசிகுமார் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தில் ஊர்த்தலைவர் மொக்கைச்சாமி வேடத்தில் முருகன் நடித்திருந்தார். நகைச்சுவை கலந்த இக்கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து அவர் சில படங்களில் நடித்தார். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர், இலைக்கடை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி