உடல் நிலை சீரான நிலையில், இந்திய
கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் குறைந்து வந்ததால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உடல்நிலை சற்று தேறியதால் கில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாக உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் பங்கேற்கவில்லை. அடுத்த போட்டியிலும் அவர் பங்கேற்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.