தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவி வருகிறது. குறிப்பாக, சென்னை பிரசிடென்சி கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி மற்றும் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட ஐந்து கல்லூரிகளை மாணவர்கள் அதிகமாக தேர்ந்தெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை இணையதளம் மூலம் இதுவரை 1,87,310 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.