சென்னையில் காதலிக்க மறுத்த மாணவியை, இளைஞர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கு, மூத்த மாணவரான தருண், காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவி, தருணின் காதலை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த, மாணவர் தனது நண்பருடன் சேர்ந்து மாணவியை வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த மாணவியின் தாயையும் வெட்டியுள்ளார். இருவரும் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் இருவரையும் கைது செய்தனர்.