டெல்லியில் அரசுப் பள்ளிக்கு வெளியே 14 வயது மாணவர் இஷூ என்பவர் கத்திக் குத்துக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவத்தன்று வழக்கப்போல பள்ளியை முடித்துவிட்டு மாணவர் இஷூ வீடு திரும்மும்போது, பள்ளி வாசலில் அவருக்கும், சக மாணவனுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், தகராறில் சக மாணவனின் கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து, இஷூவை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் ஏழு நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.