மதுரை பைபாஸ் சாலைப் பகுதியில், முன்னாள் சிறைவாசி ஒருவர் சாலையோர உணவகம் நடத்தி வருகிறார். அவரது மகளுக்கு, மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நேற்று (டிச.21) காலை, தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாலகுருசாமியை, அப்பெண் சாலையில் வைத்து தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.