மாணவி பலாத்காரம்.. ஓட்டுநருக்கு 15 ஆண்டு சிறை

50பார்த்தது
மாணவி பலாத்காரம்.. ஓட்டுநருக்கு 15 ஆண்டு சிறை
தர்மபுரி வடகரையைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் தனியார் பள்ளியில் பஸ் ஓட்டுநராக இருந்தார்.
2019ஆம் ஆண்டு அந்த பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் தர்மபுரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போக்சோ வழக்குப்பதிவு செய்து மாதேசை கைது செய்தனர். நேற்று விசாரணையின் முடிவில் மாதேஷ் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி