அண்ணா பல்கலை., வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் (37) என்பவர் இன்று (டிச.25) கைது செய்யப்பட்டுள்ளார். “கைதானவர் திமுக பிரமுகர் என தெரிகிறது” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், “கைதானவர் திமுகவினருடன் நெருக்கம் வைத்து அக்கட்சி உறுப்பினராகி உள்ளார். திமுகவினரின் அழுத்தத்தால் கைதானவர் மீதான வழக்குகளை போலீஸ் விசாரிக்கவில்லை” என அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார்.