ஆவடி அடுத்த, முத்தா புதுப்பேட்டையைச் சேர்ந்த நவீன் (வயது 21) தனியார் பொறியியல் கல்லூரியில் டிப்ளமா முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இவர், நேற்று காலை 7: 35 மணி அளவில், கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, உழைப்பாளர் நகரில் உள்ள 'எஸ்.சி. கேட்டை' கடக்க முயன்றபோது, பட்டாபிராமில் இருந்து சென்னை வந்த மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.