தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் சிரோலு மண்டல மையத்தில் உள்ள ஏகலைவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் ஃபேர்வெல் விழாவிற்காக நேற்று (பிப்.04) இரவு கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மாணவி சபாவத் ரோஜா (16), மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.