திருவண்ணாமலையை சேர்ந்த சுதேசி என்பவர் சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா விடுதியில் தங்கி, மாநில கல்லூரியில் படித்து வந்தார். இந்த சூழலில், சுதேசி நேற்று (ஜன. 25) மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். முதற்கட்ட விசாரணையில், சொந்த ஊரில் காதலித்து வந்த பெண், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களாகவே சுதேசியிடம் பேசவில்லை என தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.