பலமாக வீசிய காற்று - கோவையில் மழைக்கு வாய்ப்பு

584பார்த்தது
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயில் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி இருப்பதால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்து வருகிறது. அந்த வகையில், கோவையில் இன்று காற்று பலமாக வீசி வருகிறது. மேலும், மழை பெய்யும் நிலை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி