இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்த போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. இதனால் அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்து இருந்தது. இதனிடையே, கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதலை முன்னெடுத்தது. இந்த தாக்குதலை கத்தார் ராணுவம் நடுவானில் சிதறடித்தது. இந்த விஷயம் ஈரான் - கத்தார் உறவுகளை பாதித்த நிலையில், கத்தாரில் உள்ள ஈரான் தூதரை நேரில் அழைத்து கத்தார் அரசு கடும் கண்டனத்தை தெரிவித்து அனுப்பி வைத்துள்ளது.