உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நிலத்தகராறில் அடித்து உயிருடன் புதைக்கப்பட்ட ரூப் கிஷோர் என்ற நபரின் உயிரை தெருநாய்கள் காப்பாற்றிய அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிஷோரின் வீட்டுக்கு சென்ற 4 பேர் அவரை அடித்து, அவர் இறந்துவிட்டதாக நினைத்து புதைத்துள்ளனர். பின் தெருநாய்கள் பள்ளம் தோண்டி அவரை காப்பாற்றியுள்ளன. இதையடுத்து, கிஷோரின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.