ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த 6 பேரை அங்கு சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று கடித்து குதறியது. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து நிலைய பகுதிகளில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.