நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசுக்கு மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், களைப்பற்ற உழைப்பால் தேசமே வியக்கும் முதல்வராக தளபதி அண்ணன் ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார். அவர் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தென்றல். பாசிசத்தை எதிர்ப்பதில் புயல் என வாழ்த்து மழை பொழிந்துள்ளார். இவர் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.