ராணிப்பேட்டை: நெமிலியை சேர்ந்த மோகன்ராஜ் வீட்டிலிருந்து, 11 சவரன் நகை, 1,250 கிராம் வெள்ளி திருட்டு போனது. இதேபோன்று, சுரேஷ் என்பவர் வீட்டிலும் நகைகள் மற்றும் பணம் திருட்டு போனது. இது குறித்து விசாரித்த போலீசார் சூர்யா என்பவரை கைது செய்தனர். விசாரணையில் சூர்யா, நகைகளை திருடி காவலர்களான பாஸ்கரன், அப்துல் சலாம் ஆகியோரிடம் கொடுத்து அடகு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.