உள்நாட்டுப் பங்குச் சந்தைகள் இன்று (ஜூலை 29) ஓரளவு ஏற்றத்துடன் முடிவடைந்தன. இன்றைய வர்த்தகத்தின் முடிவில், சென்செக்ஸ் 30.39 புள்ளிகள் (0.037%) அதிகரித்து 81,363.11 ஆகவும், நிஃப்டி 7.60 புள்ளிகள் (0.031%) அதிகரித்து 24,842.45 ஆகவும் உள்ளன. டிவிஸ் லேப்ஸ், பிபிசிஎல், லார்சன், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் சிறப்பாக செயல்பட்டன. டைட்டன், பார்தி ஏர்டெல், சிப்லா, ஐடிசி, கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவைகள் நஷ்டத்தைச் சந்தித்தன.