எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தனது சேவைகளைத் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேவையை பெற பயனர்கள் முதலில் ரூ. 33 ஆயிரத்திற்கு செயற்கைக்கோள் கருவியை வாங்க வேண்டும். அதன்பின்பு மாதம் தோறும் ரூ.3 ஆயிரத்திற்கு அன்லிமிடெட்டு இணைய சேவையை பெற முடியும். மேலும், முதற்கட்டமாக ஒவ்வொரு டிஷ் வாங்கும் வாடிக்கையாளருக்கும் ஒரு மாத இலவச சேவையை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.