சிதம்பரம் மற்றும் சென்னையின் 6 வார்டுகளில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் வரும் 15ம் தேதி தொடங்க உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதை முன்னிட்டு நாளை (ஜூலை 7) முதல் வீடு வீடாக சென்று அதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்குகிறது. முகாம்கள் குறித்த விவரங்களையும் தகவல்களையும் மக்களிடம் தெரிவித்து, விண்ணப்பத்தை வழங்கும் பணியினை சுமார் 2000 தன்னார்வலர்கள் மேற்கொள்ள உள்ளனர்.