60 வருடமாக வெறும் பொய்யை மட்டுமே சொல்லி வந்துள்ளார்கள் என்றும் இவ்வளவு தொழில்நுட்பம் இருந்தும் நான் பேசாததை பேசியதாக பேசுகிறார் திராவிட நாயகன் ஸ்டாலின் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி நேற்று (ஜன., 29) பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், 'எங்களுக்கு எந்த திராவிடரும் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை ஆரியத்தை எதிர்க்க. தமிழர்களின் பரம்பரைக்கே ஆரியர்களை எதிர்க்கும் இரத்தம் உண்டு' என தெரிவித்தார்.