திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு புனித தோமையார் ஆலய திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக தேவாலயத்தில் தூத்துக்குடி குருக்கள் மாமன்ற செயலர் அருட்தந்தை மைக்கேல் ஜெகதீஷ், பங்குத்தந்தை எட்வர்ட், அருட்தந்தை பால்ராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் புனித தோமையார் உருவ சிலை தேர் பவனி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் அருட் சகோதரிகள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.