இலங்கை அணியின் முன்னணி வீரரான திமுத் கருணாரத்னே (36) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் 6ஆம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியுடன் அவர் ஓய்வுபெற இருக்குறார். இதுவே அவரது கடைசி சர்வதேச போட்டி எனவும் அவர் அறிவித்துள்ளார். இது அவரது 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர், 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7172 ரன்கள் குவித்துள்ளார். 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி1316 ரன்கள் குவித்துள்ளார்.