214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அபார வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19.2 ஓவரில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷங்கா (79), குஷால் மெண்டிஸ் (45) ரன்கள் எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர்களில் பராக் 3, அர்ஷ்தீப் 2, அக்சர் படேல் 2, பிஷ்னோய் 1, சிராஜ் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய பேட்ஸ்மேன்களில் சூர்யா 58 ரன்கள் எடுத்தார்.