கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மேட்டு தெருவில் இன்று (மே 17) காலை ஒரு புள்ளிமான் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. புள்ளிமானின் வால்பகுதியில் தெருநாய்கள் கடித்து குதறியிருப்பதை அப்பகுதி மக்கள் கண்டறிந்தனர். நள்ளிரவில் உணவு தேடி வந்த புள்ளிமானை, தெருநாய்கள் கடித்ததில் இறந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், தகவல் அறிந்த வனத்துறை மற்றும் போலீசார் இணைத்து இறந்த புள்ளிமானை மீட்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.