சகோதரர் கலாநிதி மாறன், காவிரி உள்ளிட்ட 8 பேருக்கு தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முரசொலி மாறனுக்கு சொந்தமான சன் குழுமத்திற்குள் பூசல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலாநிதி மாறனின் சன் டிவி சட்டவிரோத பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2003இல் 12 லட்சம் பங்குகளை மாற்றியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தயாநிதி அனுப்பும் 2வது நோட்டீஸ் ஆகும்.