கடந்தாண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய சர்ச்சையில் சிக்கி கைதானார் மகா விஷ்ணு. இந்நிலையில் மகா விஷ்ணு தனது பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், "என் உயிரும், உள்ளமும் கலந்த பரம்பொருள் அறக்கட்டளையை முடிவுக்கு கொண்டு வருகிறேன் என்ற வார்த்தைகளை எழுதும்போது, என் உள்ளத்தில் நிம்மதி மட்டுமே இருக்கிறது. அறக்கட்டளைக்கு இனி எவ்வித பணமும் அனுப்ப வேண்டாம்" என்றார்.