தமிழ்நாட்டில் பழங்குடியினர் நலத்துறை உண்டு, உறைவிடப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச போட்டி தேர்வு பயிற்சி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. JEE, NEET, CUET, CLAT உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளிமலை, பேச்சிப்பாறை உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.