உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணி முதல் முறையாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 148 ரன்கள் என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தோல்வியின் விளிம்பில் தத்தளித்த அணியை ரபாடா - யான்சன் ஜோடி மீட்டெடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.