காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தன் மகளும் மற்றும் எம்பியுமான பிரியங்காவுடன் ஹிமாச்சலில் உள்ள சிம்லாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அங்குள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம் காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர், வழக்கமான பரிசோதனைக்கு பிறகு அவர் இன்று (ஜூன் 8) வீடு திரும்பி உள்ளார்.