மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், மாந்திரீகம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். இவரது மனைவியின் சகோதரருக்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளது. எனவே, திருமண தடை நீங்க மாந்திரீக பூஜை செய்ய முடிவு செய்திருக்கிறார். மேலும், தனது மனைவியையும், மாமியாரையும் நிர்வாணமாக நிற்க வைத்து பூஜை செய்து, அதனை புகைப்படம் எடுத்துள்ளார். அதனை மனைவியின் குடும்பத்தாருக்கு அனுப்பியுள்ளார். இதனால் விரக்தியடைந்த மனைவி, கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.