உ.பி: படாவுன் மாவட்டத்தை சேர்ந்த குல்பஹர் டெல்லியில் ஸ்கிராப் வியாபாரம் செய்து வந்துள்ளார். அவருக்கு அப்சல் என்ற மருமகன் இருந்துள்ளார். இந்நிலையில், குல்பஹரின் மனைவி குஷ்ணுமா தனது நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு அப்சலுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இந்த விவகாரம் குல்பஹருக்கு தெரியவந்ததை அடுத்து தனது கிராமத்திற்கு விரைந்து வந்துள்ளார். இதையடுத்து, தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு குல்பஹர் போலீசில் புகாரளித்துள்ளார்.