டாஸ்மாக் கடைகளில் ஏதோ நடக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பரபரப்பு கருத்தை முன் வைத்துள்ளார். "மொத்த ஆவணங்களை பார்க்கும் போது டாஸ்மாக்கில் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. அங்கு ஊழல் நடைபெற அனுமதிக்கக்கூடாது. கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்" என்றார். டாஸ்மாக் குறித்து ஊடகத்தில் பேட்டி அளித்த ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.